மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே திரைவடிவம் பெற்ற இந்தப் படம், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது, ஆங்காங்கே சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், கல்கியின் நாவலை படமாக கொண்டு வந்ததில் வெற்றியை நாட்டியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். ஆயிரக்கணக்கானோர் வாசித்து, தங்களின் கற்பனை சிறகுகளில் உருவாக்கி வைத்திருந்த வந்தியதேவன், குந்தவை, நந்தினி, பழுவேட்டரையர்களுக்கு இப்போது உருவம் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். இதுவே பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
புனைவு கதை என்றாலும், சோழ சாம்ராஜ்ஜியத்தின் பெருமையை தாங்கி வந்திருக்கும் படம் என்பதால் இயல்பாகவே தமிழ் ரசிகர்களின் ஆவலுக்குரிய படமாக மாறியிருக்கிறது பொன்னியின் செல்வன். வந்தியதேவன், ஆதித்ய கரிகாலன் முதல் நந்தினி, குந்தவையாக கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் வாழ்ந்திருக்கின்றனர். இதுவே படத்தின் பாதி வெற்றிக்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது.
நேற்று முன்தினம் வெளியான இந்தப் படம் முதல் நாளே 100 கோடி ரூபாய் வசூலை எட்டியிந்தது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. பார்த்திபன் ஏற்கனவே மணிரத்னத்திடம் இருந்து பாராட்டையும், வாழ்த்தையும் பெற்றுவிட்டார். தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தமிழ் குமரன் ஆகியோர் இயக்குநர் மணிரத்னத்தை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: பாகம் 1 பாக்ஸ் ஆபிஸை சுடுகாடாக்கி வருகிறது. மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ 230 கோடியை தாண்டிய இப்படம் இன்று அக்டோபர் 3 ஆம் தேதி ரூ 250 கோடி வசூலை எட்டுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது.
For the 3-day opening weekend, #PS1 has grossed more than ₹ 230 Crs+ at the WW Box office..
— Ramesh Bala (@rameshlaus) October 3, 2022