ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று, அணு ஆயுதம் வெடிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள் முதலான காட்சிகளை வெளியிட்டுள்ளது.
அத்துடன், ரஷ்யாவின் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வாகனங்கள் ரஷ்யாவின் மையப்பகுதியிலிருந்து புறப்படும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
புடின் ஆதரவு ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று, அணுகுண்டு வெடிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள் முதலான திகிலை ஏற்படுத்தும் சில காட்சிகளை வெளியிட்டுள்ளதுடன், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வாகனங்கள் ரஷ்யாவிலிருந்து புறப்பட்டுள்ளதாக தோன்றும் காட்சி ஒன்றும் வெளியாகியுள்ளது.
ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று, அணு ஆயுதம் வெடிக்கும் காட்சிகளையும், அணு ஆயுதம் வெடிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள் மற்றும் நச்சுவாயுவிலிருந்து காப்பாற்றும் முகமூடிகள் முதலான காட்சிகளை வெளியிட்டு, அணு ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்னும் காட்சியைக் கண்முன் கொண்டுவந்து திகிலை உருவாக்கியுள்ளது.
Credit: East2West
மற்றொரு பக்கத்தில், ரஷ்யாவின் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வாகனங்கள் ரஷ்யாவின் மையப்பகுதியிலிருந்து புறப்படும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தக் காட்சிகளில், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வாகனங்கள் ஏற்றப்பட்ட ரயில்களைக் காணலாம்.
அவை மத்திய ரஷ்யாவிலிருந்து உக்ரைனில் போர் நடக்கும் பகுதியை நோக்கி பயணிப்பதாக கருதப்படுகிறது.
Credit: East2West
இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை நிபுணரான Konrad Muzyka என்பவர், இது ரஷ்யா மேற்கத்திய நாடுகளை எச்சரிப்பதற்காக விடுத்துள்ள சமிக்ஞையாக இருக்கலாம் என்கிறார்.
இதற்கிடையில், ரஷ்யாவின் செசன்ய பகுதி தலைவரான Ramzan Kadyrov, உக்ரைன் மீது அணு ஆயுதங்கள் பிரயோகிப்பது குறித்து ரஷ்யா பரிசீலிக்கவேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Credit: East2West