வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாட்டில் வறுமை, வேலையின்மை என்பது நாட்டின் முக்கிய பிரச்னைகள் என்றும் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில் நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளது. இருப்பினும், சில துறைகளில் நாம் சிக்கல்களை எதிர்கொண்டு வருவது உண்மைதான். வறுமை என்பது அரக்கன் போல இருக்கும் பெரிய சவாலாக நம் முன் இருக்கிறது.
இந்த வறுமை என்ற அரக்கனை நாம் வதம் செய்ய வேண்டியது முக்கியம். நாட்டில் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வது வேதனையளிக்கிறது.
அதேபோல நாட்டில் 23 கோடிக்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு ரூ.375க்கும் குறைவான வருமானம் கொண்டவர்களாகவே உள்ளனர். இப்போது நாட்டில் 4 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். நாங்கள் எடுத்த கணக்கெடுப்பின்படி நாட்டில் வேலையின்மை விகிதம் 7.6 சதவீதமாக உள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வேலையின்மை நமது நாட்டில் முக்கிய பிரச்னைகளில் ஒன்று. அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேலை தேடும் இளைஞர்களை தொழில்முனைபவர்களாக மாற நாம் ஊக்குவிக்க வேண்டும். அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும். அனைத்து வேலைகளும் முக்கியமானது தான். அனைத்து வேலைகளுக்கும் நாம் சமமான மரியாதை அளிக்க வேண்டும்.
தோட்டக்காரர் தனது வேலைக்கு உரிய மரியாதை கிடைக்காவிட்டால், அந்த வேலைக்கு யாருமே செல்ல விரும்ப மாட்டார்கள். எனவே, நாம் அனைத்து வேலைகளையும் மதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement