விஜய் தேவரகொண்டாவை காதலிக்கிறேனா? ராஷ்மிகாவின் அசத்தலான பதில்!

கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா, இவரை ரசிகர்கள் பலரும் நேஷனல் க்ரஷ் என்று கூறி வருகின்றனர்.  அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து டியர் காம்ரேட், அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, தமிழில் கார்த்தியுடன் சுல்தான் போன்ற பல படங்களில் நடித்து புகழ்பெற்றார்.  சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ‘சீதா ராமம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மற்றும் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.  தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ள இவர் அமிதாப் பச்சனுடன் இணைந்து ‘குட்பை’ படத்தில் நடித்துள்ளார், அக்டோபர்-7ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தற்போது ராஷ்மிகா பிசியாக இருந்து வருகிறார்.   

நீண்ட காலமாகேவ ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதாகவும், அடிக்கடி வெளியில் செல்கிறார்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றும் வதந்திகள் பரவி வந்தது.  இந்த இருவரும் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டயர் காம்ரேட் போன்ற படங்களில் இருவரின் கெமிஸ்ட்ரியும் பலரையும் கவர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  இவர்கள் பற்றி தொடர்ந்து பரவி வரும் வதந்திக்கு ராஷ்மிகா சமீபத்திய பேட்டியொன்றில் விளக்கமளித்துள்ளார்.  அதில் அவர் கூறுகையில், இது மிகவும் அழகாக இருக்கிறது, நானும் விஜய்யும் இணைந்து நிறைய பணிகள் செய்துள்ளோம், ஒரு தொழிலை பற்றி சரியாக தெரியாத ஒரே எண்ணம் கொண்ட இருவர் ஒன்றாக பணியாற்றும்போது அவர்கள் நண்பர்களாக மாறுவார்கள் பின்னர் அவர்களுக்கென்று ஒரு நண்பர் கூட்டம் உருவாகும்.

மேலும் எனக்கும் ஹைதராபாத்தில் நிறைய நண்பர்கள் உள்ளனர், விஜய் தேவரகொண்டாவிற்கும் நிறைய நண்பர்கள் உள்ளனர், எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் பலர் உள்ளனர்.  எல்லோரும் ராஷ்மிகா-விஜய் என்று சொல்வதை கேட்க அழகாக இருக்கிறது, நான் விரைவில் அவருடன் செர்ந்து அடுத்த படம் பண்ணுவேன், நாங்கள் சிறந்த நடிகர்கள், ஒருபோது இயக்குனர்களை ஏமாற்றமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.