வைத்திலிங்கத்தை கைவிடுவாரா ஓபிஎஸ்? எடப்பாடியின் எதிர்பார்ப்பு என்ன?

அதிமுக பொதுக்குழுவில் 95 சதவீத உறுப்பினர்கள் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக பொறுப்பு வகித்த ஒருவர் கூட ஓபிஎஸ் பக்கம் எட்டிகூட பார்க்கவில்லை. தர்மயுத்தம் சமயத்தில் ஓபிஎஸ் அணியில் இருந்த மாஃபா பாண்டியராஜன்

பக்கம் சென்றதோடு, அவர் காலில் விழுந்து ஆதரவு தெரிவித்தார்.

ஆரம்பத்தில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்குவதை பார்த்து அவர் பக்கம் சென்றனர். இருப்பினும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் மட்டும் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர்.

அதிலும் வைத்திலிங்கம் கொடுத்த நம்பிக்கை தான் ஓபிஎஸ்ஸை இக்கட்டான இந்த சூழ்நிலைகளில் துணிந்து நடைபோட வைத்தது. ஜூன் 23 பொதுக்குழுவுக்கு அத்தனை எதிர்ப்புக்கிடையில் ஓபிஎஸ் போனார் என்றால் உடன் இருந்த வைத்திலிங்கம் தான் காரணம். ஜூலை 11 பொதுக்குழுவின் போது ஓபிஎஸ் பக்கம் கவனம் திரும்ப வேண்டுமென்றால் தலைமை அலுவலகம் செல்ல வேண்டும் என்று அழைத்துச் சென்றவர் வைத்திலிங்கம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் அது பின்னர் வன்முறை வெறியாட்டத்தில் முடிந்தது.

சசிகலா தரப்புடன் மீண்டும் ஓபிஎஸ் ராசியாவதற்கு பின்னாலும் வைத்திலிங்கத்தின் பங்கு உள்ளது. இவ்வாறு ஓபிஎஸ்ஸுக்கு அரணாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் வைத்திலிங்கம்.

இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி தரப்பின் கோபம் வைத்திலிங்கத்தை நோக்கி திரும்பியுள்ளதாக கூறுகிறார்கள் தென் மண்டல அதிமுகவினர்.

“சசிகலாவோடு ஓபிஎஸ் சென்றுவிடக்கூடாது, இருவரும் இணைந்துவிடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக உள்ளது. இருவரும் இணைந்துவிட்டால் தென் மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியால் கால் ஊண்ற முடியாது. எனவே அதை தடுப்பதற்கான முயற்சிகளில் இபிஎஸ் தரப்பு இறங்கியுள்ளது. அதன் காரணமாகவே வைத்திலிங்கத்தை டார்கெட் செய்து தங்கமணி பேசியுள்ளார்.

ஓபிஎஸ்ஸுக்கும் வைத்திலிங்கத்துமான இடைவெளியை அதிகப்படுத்திவிட்டால் எளிதாக காரியம் சாதித்துவிடலாம் என கணக்கு போடுகிறார்கள். இந்த மாத இறுதியில் தேவர் ஜெயந்தி வருகிறது. அதற்குள்ளாக ஓபிஎஸ்ஸை தனிமைப்படுத்த வேண்டும், அல்லது தங்கள் பக்கம் கொண்டுவர வேண்டும் என துடிக்கிறார்கள். அதற்கு ஓபிஎஸ் நிச்சயம் இடம் தரமாட்டார்.

மதுரையிலும், சிவகாசியிலும், விருதுநகரிலும் எடப்பாடியால் பலன் பெற்றவர்கள் காசு கொடுத்து கூட்டிய கூட்டத்தின் முன் நின்று தான் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதை வைத்து தெற்கு நம் பக்கம் வந்துவிட்டதாக தப்பு கணக்கு போட்டுவிடக்கூடாது” என்கிறார்கள்.

பொதுக்குழு தொடர்புடைய வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒருபக்கம் விசாரணை நடைபெற்று வருகிறது. மைக் முன்னால் இரு தரப்பும் காரசாரமாக மோதிக்கொள்கின்றனர். இந்த மாத இறுதிக்குள் அதிமுகவுக்குள் பல மாற்றங்கள் இருக்கும் என்பதை மட்டும் உணர முடிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.