வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அவுரங்காபாத் :நாடு முழுதும், 200 ரயில்வே ஸ்டேஷன்கள் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் நவீனமயமாக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் பராமரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்து, ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:இந்திய ரயில்வே துறையை நவீன தொழில்நுட்ப வசதிக்கு ஏற்ப மாற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாடு முழுதும், 200க்கும் மேற்பட்ட முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களை உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவற்றில், 47 ரயில்வே ஸ்டேஷன்களுக்கான ‘டெண்டர்’ பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த ரயில்வே ஸ்டேஷன்களை நவீனப்படுத்துவதற்கான ‘மாஸ்டர் பிளான்’ தயாராக உள்ளது.
பயணியர் காத்திருப்பு அறை, உணவகங்கள், குழந்தைகளை கவரும் வகையிலான பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம்பெறும்வகையில் இந்த ரயில்வே ஸ்டேஷன்கள் மாற்றப்படும். மேலும், இந்த ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ளூர் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement