Mangalyaan விண்கலம் முடிவிற்கு வந்தது! 8 வருட செவ்வாய் கிரக ஆராய்ச்சி வெற்றி என ISRO பெருமிதம்!

இந்தியாவின் முதல் செவ்வாய் கிரக ஆராய்ச்சி விண்கலமான மங்கள்யான் விண்கலம் அதன் பயணத்தை முடித்துக்கொண்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ஆன மொத்த செலவு 450 கோடி ரூபாய் மட்டுமே ஆனது.

6 மாதங்கள் மட்டுமே தாங்கும் என்று நினைத்த இந்த விண்கலம் சுமார் 9 வருடங்கள் ஆராய்ச்சிக்காக உதவியுள்ளது. இவ்வளவு குறைவான செலவில் இப்படி ஒரு செவ்வாய் கிரக ஆராய்ச்சியை அதுவும் முதல் முயற்சியிலேயே இஸ்ரோ சாதித்துக்காட்டியுள்ளது.

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் வேறு எந்த நாட்டை விடவும் இந்தியாவிற்கு அனுபவம் மிகவும் குறைவு. ஆனால் மிகவும் திறமை வாய்ந்த அறிவியல் குழுவைகொண்டு இந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

Tesla Humanoid Robot அறிவிப்பு! Elon Musk உருவாக்கிய எந்திரன்!

தற்போது இந்த விண்கலத்தில் போதிய எரிசக்தி யில்லாத காரணத்தால் இது செயல் இழந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட சூரிய கிரகணம் காரணமாக இந்த விண்கலத்திற்கு போதிய சூரிய சக்தி கிடைக்கவில்லை.

இதனால் இதன் பேட்டரி செயல் இணைத்து தற்போது நின்றுவிட்டது. சூரிய வெளிச்சம் இல்லாமல் இந்த விண்கலம் 1 மணிநேரம் 40 நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும். ஆனால் இந்த நேரம் அதிகரித்தால் இன் பேட்டரி செயல் இழந்துபோகும்.

5G சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி! இனி இந்தியா No 1!

இந்த மங்கள்யான் அதன் தேவைக்கு அதிகமான தரவுகளை இதுவரை செவ்வாய் கிரகத்தை பற்றி அளித்திருப்பதாகவும் இதுவரை 1000 திற்கும் மேற்பட்ட புகைப்படங்களையும் வரைபடங்களையும் அளித்துள்ளது.

இந்த மங்கள்யான் திட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளதால் மீனும் எப்போது செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் அது தற்போதைக்கு கிடையாது.

Work From Home IT ஊழியர்கள் சோம்பேறித்தனமாக உள்ளார்கள்! Microsoft நிறுவன தலைவர் குழப்பம்!

ஏனென்றால் இஸ்ரோ ஏற்கனவே மிகப்பெரிய திட்டங்களான ககன்யான், சந்திராயன் 3, ஆதித்யா L1 ஆகிய திட்டங்களுக்கு தயாராகிவருகிறது. இது முடிந்த பின்னரே மீண்டும் மங்கள்யான் திட்டம் பற்றி பேசப்படும் என்று தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.