குறித்த புகைப்படம் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், அதில் சொல்லப்படாத தகவல்களும் விவாதமானது.
ஹரி- மேகன் தம்பதி தங்களின் இரு புகைப்படங்களை வெளியிட்டு, விவாதங்களுக்கு பதிலளித்துள்ளனர்.
பிரித்தானிய ராஜகுடும்பத்தினர், ராணியார் மறைவுக்கு பின்னர் முதல் உத்தியோகப்பூர்வ புகைப்படத்தை வெளியிட்டு, புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ள நிலையில், ஹரி- மேகன் தம்பதி தகுந்த பதிலளித்துள்ளனர்.
பக்கிங்ஹாம் அரண்மனை சமீபத்தில் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா, வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோரின் முதல் உத்தியோகப்பூர்வ புகைப்படம் ஒன்றை வெளியிட்டது.
Credit: Misan Harriman
குறித்த புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், அந்த புகைப்படத்தில் சொல்லப்படாத தகவல்களும் விவாதமானது.
ஒருசிலர், இனி ஹரி-மேகன் தம்பதி பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இணைவது கடினம் எனவும், அவர்களை மன்னர் சார்லஸ் ஏற்றுக்கொள்வது சந்தேகம் எனவும் குறிப்பிட்டனர்.
மட்டுமின்றி, அந்த புகைப்படத்தில், மன்னர் சார்லஸ் தமது மனைவி கமிலாவை பாதுகாக்கும் வகையில், உடல்மொழி காணப்படுவதாகவும், அதனால், இளவரசர் ஹரி இனி கமிலா தொடர்பில் கருத்து ஏதும் தெரிவித்தால் அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டினர்.
Credit: Misan Harriman
இந்த நிலையில், தொடர்புடைய புகைப்படம் வெளியான அடுத்த நாள், ஹரி- மேகன் தம்பதி தங்களின் இரு புகைப்படங்களை வெளியிட்டு, விவாதங்களுக்கு பதிலளித்துள்ளனர்.
தற்போது ஹரி- மேகன் வெளியிட்ட புகைப்படங்களே பேசுபொருளாக மாறியுள்ளதுடன், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள குறித்த புகைப்படங்கள் பெரும் ஆதரவை பெற்றுவருகிறது.
குறித்த புகைப்படங்களுக்கு பதிலளித்தவர்கள் பெரும்பாலும், தகுந்த பதிலடி, உணர்ச்சி மிகுந்த, உயிருள்ள புகைப்படங்கள் என பாராட்டி வருகின்றனர்.
இருப்பினும், மேகன் மெர்க்கலை வெறுக்கும் சில பிரித்தானியர்கள், புகைப்படங்களுக்கு மோசமான கருத்தையே பதிவு செய்துள்ளனர்.
@getty
இது மேகனின் பழிவாங்கும் செயல் எனவும், ஹரி ஏன் இதற்கு உடந்தையாக இருக்கிறார், எதிர்காலம் குறித்து அக்கறை இல்லையா அவருக்கு என பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.