எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக மாற்றியிருக்கிறார். லைகா தயாரிப்பில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலரும் நடித்திருக்கும் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கடந்த 30ஆம் தேதி படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஏறத்தாழ 70 ஆண்டுகளாக மக்களின் மத்தியில் புழங்கிய கதை என்பதாலும், பலர் எதிர்பார்த்திருந்ததாலும் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு சென்று ரசித்துவருகின்றனர். இதனால் படம் வெளியான முதல் மூன்று நாள்களிலேயே 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.
வசூலில் வரவேற்பு பெற்றதோடு மட்டுமின்றி, நாவலின் கருவை சிதைக்காமல் மணிரத்னம் எதார்த்தமாக படமாக்கியிருப்பதாகவும் பலர் கூறுகின்றனர். ஆனால் நாவல் படிக்காதவர்களுக்கு பொன்னியின் செல்வன் சிறிது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
Marching on and making history!
We extend our heartfelt gratitude to all the audience who’ve been showering us with love
Catch #PS1 in theatres near you!#PonniyinSelvan1 #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/3Fs21IX5k4
— Lyca Productions (@LycaProductions) October 3, 2022
பாகுபலியில் இருந்த பிரமாண்டம் இதில் இல்லை, அதில் இருந்த சண்டைக்காட்சிகள்போல் இதில் இல்லை என பலரும் பாகுபலியையும், பொன்னியின் செல்வனையும் ஒரே தராசில் வைத்துவருகின்றனர். ஆனால், பொன்னியின் செல்வன் வரலாற்று புனைவு, பாகுபலி முழுக்க முழுக்க கற்பனை கதை. இதை எப்படி அதனுடன் ஒப்பிடலாம் என எதிர்வாதமும் வைக்கப்படுகிறது.
இதற்கிடையே பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மணிரத்னம் ஒரேகட்டமாக இரண்டு பாகங்களையும் எடுத்துமுடித்துவிட்டார். இதனையடுத்து படமானது அடுத்த மே மாதம் வெளிவரவிருக்கிறது.
இந்நிலையில், இந்த வாரம் வெளியாகவிருந்த படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சுந்தர்.சி இயக்கத்தில் ஜெய் – ஜீவா உள்ளிட்டோர் நடித்துள்ள Coffee With காதல் படம் வெளியாகவிருந்தது. இதற்கான புரமோஷன் வேலைகளும் மும்முரமாக நடைபெற்றன.
அதிக திரையரங்குகளில் வெளியிடுவதுதான் சரி என்பது சுந்தர்.சியின் திட்டம். ஆனால் பொன்னியின் செல்வன் வெளியாகியிருக்கும் காரணத்தினால் அவர் நினைக்கும் எண்ணிக்கையிலான திரையரங்குகள் கிடைக்காத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே Coffee with காதல் படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.