மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
உலகளவில் மூன்று நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலானதாக லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டிருந்தது.
இந்திலாந்தில் மட்டும் இதுவரை 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன் கமலின் விக்ரம் திரைப்படம் 7.7 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த சாதனையை நான்கே நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் முறியடித்திருப்பதோடு 1 மில்லியன் பவுண்ட் வசூலை விரைவில் கடந்து விடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.