இந்தியாவிலேயே தமிழகத்தில் தான்… வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரும்பு பெண்மணி திட்டத்தின் கீழ் இரும்பு சத்து நிறைந்த ஊட்டத்து நிறைந்த பெட்டகத்தை வழங்கினார்.

பின்னர் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை ஆணை, புதிய ரேஷன்கார்டு ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தாயின் கர்ப்ப காலம் தொட்டு குழந்தை பிறப்பு முதல் தாய்மார்கள் கண்காணிக்கப்பட்டு ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் நாட்டில் தமிழகம் சுகாதாராத்துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும் ரத்தசோகையை போக்க கர்ப்பிணி தாய்மார்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ரத்தசோகை இருப்பின் அவர்களுக்கு தொடர்ந்து ரத்த விருத்திக்கு தேவையான உணவுப்பொருட்களும் மருந்துகளும் வழங்கப்படும் திட்டம்தான் இரும்பு பெண்மணி திட்டம்.

இத்திட்டத்தை பயன்படுத்தி இந்தியாவிற்கு வருங்கால சந்ததிகளை தரும் கர்ப்பிணி தாய்மார்கள் அனைவரும் இரும்பு பெண்மணிகளாக திகழ வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண் ஒருவர் எழுந்து தமிழக அரசின் சாதனைகளையும், மகளிருக்கு வழங்கப்படும் முக்கிய திட்டங்கள் குறித்து கவிதையாக பேசியது அனைவரிடமும் வரவேற்பே பெற்றது. தொடர்ந்து, திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் கலந்து கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.