புதுடெல்லி: உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உணவு தானியங்கள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் விவ காரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: உள்நாட்டில் மக்களின் தேவையை ஈடு செய்யும் அளவுக்கு உணவு தானியங்களை மத்திய அரசு போதுமான அளவில் கையிருப்பு வைத்துள்ளது. மேலும், சந்தையில் கோதுமை, ஆட்டா மற்றும் அரிசி வகைகளின் விலை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை நிலவரங்களை மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேவைப்படும் நேரத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விலை உயர்வு கட்டுப்படுத்தப்படுகிறது.
பண்டிகை காலத்தில் மக்கள் பாதிப்படையக்கூடாது என்பதற் காகவே ஏழைகளின் நலன் கருதி பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (பிஎம்ஜிகேஏஒய்) டிசம்பர் வரையில் (3 மாதம்) நீட்டிக்கப்பட்டுள்ளது. சில்லறை மற்றும் மொத்த விற்பனையில் அரிசி மற்றும் கோது மையின் விலை குறைந்துள்ளது. அதேசமயம், ஆட்டாவின் விலை கடந்த ஒரு வாரமாக மாற்றமின்றி உள்ளது. உள்நாட்டில் உணவு தானியங் களின் விலை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காகவே கோதுமை மற்றும் அரிசி ஏற்று மதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.
கடந்த 2-3 ஆண்டுகளாக அரிசி மற்றும் கோதுமைக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதாரவிலை (எம்எஸ்பி) அதிகரிக்கப்பட் டுள்ளது. 2021-22 நிதியாண்டில் உணவு தானியங்களின் விலை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்தது. இதற்கு, 80 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வெளிச் சந்தையில் விற்பனைக்கு அனுப்பப்பட்டதே முக்கிய காரணம். அதன் விளைவாகத்தான் விலை கட்டுப் பாட்டுக்குள் இருந்தது. இவ்வாறு மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.