"எனது ராணி!" – நெகிழ்ந்த ரன்வீர் சிங்; தீபிகா படுகோனுடனான விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

நடிகர் ரன்வீர் சிங் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாள்களாக அவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இருவரும் பிரியப்போவதாகவும் சமூக வலைத்தளத்தில் செய்தி பரவியது.

இது குறித்து ரன்வீர் சிங் ஏற்கெனவே மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனாலும் இந்த வதந்திகள் அடங்குவதாக இல்லை. இருவரும் இச்செய்தியை சமூக வலைதளங்கள் மூலம் மறுத்து இருந்தனர். இந்நிலையில் தீபிகா படுகோன் பிரபல நகைக்கடை மற்றும் வாட்ச் கம்பெனி ஒன்றின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

தீபிகா – ரன்வீர்

இது குறித்து ரன்வீர் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “எனது ராணி, விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருப்பது நம்மைப் பெருமைப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ரன்வீர் சிங்கின் இப்பதிவு இருவருக்கும் இடையே எந்தவித பிரச்னையும் இல்லை என்பதையே காட்டுகிறது.

இந்தப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விரைவில் இரண்டு பேரும் இணைந்து படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றனர். இதனை ரன்வீர் சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். இருவரும் 2012ம் ஆண்டு காதலிக்க ஆரம்பித்தனர். 2018ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தீபிகா படுகோன் தற்போது நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ‘பதான்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு குடியரசு தினத்துக்குத் திரைக்கு வருகிறது. இது தவிர தீபிகா, ஹ்ரித்திக் ரோஷனுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.