காஷ்மீரில் ஐ.பி.எஸ். அதிகாரி கொலை: வீட்டு உதவியாளர் கைது| Dinamalar


ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் வீட்டில் சிறைத்துறை டி.ஜி.பி. கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வீட்டு உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோஹியா, 57, நேற்று வீட்டில் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். தகவலறிந்த உள்ளூர் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரித்தனர்.
தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வைத்து தீவிர தேடுதல் வேட்டையில், அவரது வீட்டில் உதவியாளராக பணியாற்றிய யாசிர் அகமது(23) என்பவரை கைது செய்தனர். இவர், கடந்த 6 மாதமாக தான் அங்கு பணியாற்றி வந்துள்ளார்.

மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்ட குற்றவாளி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் போல் தெரிவிதாக போலீசார் தெரிவித்தனர்.இதனிடையே இந்த கொலை சம்பவத்திற்கு உள்ளூர் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.