ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி மர்ம கொலை! ஒருவர் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஜம்மு நகர் உதய்வாலா பகுதியை சேர்ந்த சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா என்பவர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் செல்ல உள்ள நிலையில், பயங்கரவாதிகளின் இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நேரத்தில் சிறைத்துறை ஐஜி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த அவரது உடலை மீட்ட போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது கொலைக்கு பயங்கரவாத குழுக்களில் ஒன்றான,  மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) பொறுப்பேற்றுள்ளது. இதுதொடர்பாக அந்த பயங்கரவாத குழு வெளியிட்டுள்ள பதிவில், எங்கும் துல்லியமாகத் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதை எச்சரிக்கும் சம்பவம் தான் இத்தகைய உயர்மட்ட நடவடிக்கைகளின் ஆரம்பம் இதுவாகும்.

பாதுகாப்புக் கட்டத்தின் மத்தியில் வருகை தந்த உள்துறை அமைச்சருக்கு இது ஒரு சிறிய பரிசு. கடவுள் விரும்பினால், எதிர்காலத்தில் இது போன்ற செயல்பாடுகளை நாங்கள் தொடருவோம், என்று தெரிவித்துள்ளது

இறந்த லோஹியாவின் உடற்கூறாய்வின், முதற்கட்ட பரிசோதனையில், லோஹியா காலில் எண்ணெய் தடவிக்கொண்டிருந்த போது, கொலை யாளி லோஹியாவை மூச்சுத் திணற வைத்து கொன்றுள்ளார். மேலும் உடைந்த கெட்ச்அப் பாட்டிலைப் பயன்படுத்தி அவரது கழுத்தை அறுத்து, பின்னர் உடலுக்குத் தீ வைக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் குற்றவாளிகள் தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த கொலை சம்பந்தமாக, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கண்ட நிலையில், முக்கிய குற்றவாளியான யாசிர் அகமது என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர் லோகியா வீட்டில் வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.