புதுடில்லி: ஜே.இ.இ., பிரதான தேர்வில் கடந்த ஆண்டு முறைகேடு நடந்த விவகாரத்தில், ரஷ்யாவை சேர்ந்த நபரை சி.பி.ஐ., நேற்று கைது செய்தது.
ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பரில், ‘ஆன்லைன்’ வாயிலாக நடந்த ஜே.இ.இ., பிரதான தேர்வில் தொழில்நுட்ப ரீதியாக கணினி முடக்கப்பட்டு, தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ‘அபினிட்டி எஜுகேஷன்’ என்ற பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர்கள் சித்தார்த் கிருஷ்ணா, விஷ்வம்பர் மணி திரிபாதி, கோவிந்த் வர்ஷ்னே உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.இந்த முறைகேட்டில் வெளிநாட்டு நபர் மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்டது.
அவரை சி.பி.ஐ., தேடி வந்தது.இந்நிலையில், அந்த நபர் புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ரஷ்யாவில் இருந்து வந்த அந்த நபரை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement