டி20 உலக கோப்பை தொடரில் இருந்து பும்ரா அதிகாரப்பூர்வமாக விலகல்.
ஜடேஜாவை தொடர்ந்து இரண்டாவது மூத்த நட்சத்திர வீரர் பும்ரா இந்திய அணியில் இருந்து விலகல்.
அவுஸ்திரேலியாவில் தொடங்க இருக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.
செப்டம்பர் 28ம் திகதி திருவனந்தபுரத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அதன் பிறகு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.
AP
இருப்பினும் அக்டோபர் 16ம் திகதி அவுஸ்திரேலியாவில் தொடங்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சரியான நேரத்தில் குணமடைந்து அணிக்கு திரும்புவார் என அணி நிர்வாகம் நம்புவதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அக்டோபர் 1ம் திகதி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2022ம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அக்டோபர் 2ம் திகதி உறுதிப்படுத்தியுள்ளது.
ANI
மேலும் பும்ராவிற்கு பதிலாக மாற்று வீரரை விரைவில் அறிவிப்போம் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு; 2040 ஆம் ஆண்டுக்குள் முதல் அணு இணைவு மின் ஆலை: பிரித்தானிய அமைச்சர் அறிவிப்பு
முழங்கால் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் ரவீந்திர ஜடேஜாவுக்கு பிறகு உலக கோப்பை அணியில் இருந்து விலகும் இரண்டாவது மூத்த நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஆவார்.