வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
துபாய்: துபாயில் கட்டப்பட்ட ஹிந்து கோயில் இன்று (அக்.,4)திறக்கப்பட உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் மிக பழமையான ஹிந்து கோயில் சிந்தி குரு தர்பார் கோயில் , துபாயில் 1950களில் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து துபாயின் ஜபேல் அலி பகுதியில் சுமார் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்லை. ரூ.148 கோடி செலவில், புதிய ஹிந்து கோயில் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கு துபாய் அரசு அனுமதி வழங்கியது. தொடர்ந்து 2020 பிப்., மாதம் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த கோயில் பணிகள் முடிகள் முடிந்த நிலையில் இன்று திறக்கப்பட உள்ளது. கோயிலில் உள்ள 16 தெய்வங்களின் சிலைகள் மற்றும் கோவில் வேலைப்பாடுகளை பார்வையிட பக்தர்கள் மற்றம் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவற்றில் பெரும்பாலான சிலைகள் கோயிலின் பிரதான கருவறையிலேயே வைக்கப்பட்டுள்ளன. கருவறையின் மேற்பகுதி மாடம் விரிந்த நிலையிலான இளஞ்சிவப்பு நிறத்தில் முப்பரிமான வடிவிலான தாமரை பூ வரையப்பட்டுள்ளது.
சிறப்பு பூஜைகள் மற்றும் நிர்வாக முன்னேற்பாடு பணிகளுக்காக செப்.,1ல் கோயில் திறக்கப்பட்ட போது, பலர் கோயிலில் வழிபாடு நடத்தியதுடன் வெள்ளை மார்பில் மூலம் கட்டமைக்கப்பட்ட வடிவமைப்பை பார்வையிட்டனர். அராபிக் மற்றும் ஹிந்து பாரம்பரிய முறைப்படி பில்லர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வார இறுதி நட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதாக உள்ளதால், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை உறுதிபடுத்தவும் கியூஆர் கோடு முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
கோயில் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் தகவல்படி, புதிய ஹிந்து கோயிலானது மாலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். தினமும் ஆயிரம் முதல் 1200 பேர் வரை சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement