போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் சேவை!
நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் இல்லாத மாவட்டங்களை இந்திய ரயில்வே பாதையுடன் இணைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் தொடங்கியது. நிதி ஆயோக் குழுவானது இந்திய ரயில்வே வரைபடத்தில் இல்லாத மாவட்டங்களை கண்டறிந்து இந்திய ரயில்வே பாதையுடன் இணைக்கும் திட்டத்தை பரிந்துரைத்திருந்தது. மேலும் மீட்டர் கேஜ் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் போடிநாயக்கனூரில் இருந்து மதுரை செல்லும் மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி கூறியதாவது “பெரிய நகரங்களை இணைக்கும் வழித்தடங்களில் இரட்டை பாதை வசதி உள்ளது. ரயில் வசதி உள்ள மாவட்ட நகரங்களிலும் இரட்டை பாதை வசதி ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. மீட்டர் கேஜ் பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணிகளும் முழுவிச்சில் நடைபெற்று வருகின்றன.
திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையிலான 34 கிலோ மீட்டர் அகல பாதை பணி முடிவுற்று சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் விரைவில் ரயில் சேவை தொடங்க உள்ளோம். தேனி-போடிநாயக்கனூர் இடையான 17 கிமீ அகலப்பாதை பணி இம்மாதம் நிறைவடையும்.
இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தூங்க உள்ளோம். குறிப்பாக போடியில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் சேவை தூங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தெற்கு ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இனி போடிநாயக்கனூர் மக்கள் சென்னைக்கு நேரடியாக பயணம் மேற்கொள்ளலாம்.