கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஞாயிற்றுக்கிழமை கோசாய் மடத்தில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், “மொழி அல்லது பகுத்தறிவின் பெயரால் சில பிளவுபடுத்தும் சக்திகள் தேசத்தை பிளவுபடுத்த முயல்கின்றன. ஆனால் அத்தகைய முயற்சிகளை மத்திய அரசு, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முறியடித்துள்ளனர். தேசத்தின் பாதுகாப்பை வைத்து அரசியல் நடத்துபவர்களை விட்டுவைக்க முடியாது.
ஒவ்வோர் இந்தியனும் பெருமை கொள்ளும் அளவுக்கு மோடி நல்லாட்சியை வழங்கி வருகிறார். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவை (பிஎஃப்ஐ) தடை செய்ததன் மூலம், அனைத்து தேச விரோத குழுக்களுக்கும் மத்திய அரசு ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு சரியான முடிவை எடுத்தது. இது அனைத்து தேச விரோத குழுக்களுக்கும் ஒரு செய்தியாக இருக்கும். இதுபோன்ற அமைப்புகளுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.