முதலில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள். அதன் பிறகு நான் அந்த விளம்பரத்தில் நடிப்பதை தவிர்க்கிறேன். குடி பழக்கம் குடியை கெடுக்கும் என்கிறீர்கள். ஆனால் மது கடையை நீங்களே நடத்துவீர்கள் என கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தரிசனம் மேற்கொண்ட பின் நடிகரும், அகில இந்திய சமத்துவ கட்சி தலைவருமான சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.
இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு! – செல்லூர் ராஜூ பேட்டி!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழி திரைப்பட படப்பிடிப்பிற்காக வந்த நடிகரும், அகில இந்திய சமத்துவ கட்சி தலைவருமான சரத்குமார் 108 வைணவ திருத்தலங்களுள் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது, முதலில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள். அதன் பிறகு நான் அந்த விளம்பரத்தில் நடிப்பதை தவிர்க்கிறேன்.
குடி பழக்கம் குடியை கெடுக்கும் என்கிறீர்கள். ஆனால் மது கடையை நீங்களே நடத்துவீர்கள். மக்களுக்கு எது எது எல்லாம் தீமை யை விளைவிக்கின்றதோ அதை முதலில் தடை பண்ணுங்கள்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்பெரிய பழுவேட்டையர் பாத்திரத்தில் நடித்தது எனக்கு நிறைவை தருகிறது. தமிழ் திரைப்படங்களில் திராவிட சித்தாந்தத்தை சிலர் மாற்ற முயல்வதாக டைரக்டர் வெற்றிமாறன் கூறியுள்ள கேள்விக்கு, இதுகுறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.