பணி நீக்கம் செய்யப்பட்ட சுங்கச் சாவடி ஊழியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச் சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 28 பேர் தற்போது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கடந்த 1 ஆம் தேதி காலை ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடம் நீக்கம் செய்தனர். இதையடுத்து மீண்டும் பணி வழங்கக் கோரி கடந்த 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி இரவு வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
image
இந்நிலையில், அவர்கள் தற்போது இரவு திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் ஏகஜோதி மற்றும் வட்டாட்சியர் மணிமேகலை டிஎஸ்பி மகேஸ் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 28 தொழிலாளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், 1 ஆம் தேதியிலிருந்து 3 ஆம் தேதி இரவு வரை இலவசமாக சுங்கக் கட்டணம் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
image
இதனால் சுங்கச் சாவடிக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஃபாஸ்ட்ராக் முறையில் மீண்டும் நேற்று நள்ளிரவு முதல் சுங்கச் சாவடியை கடக்கும் வாகனங்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்ட சுங்கச் சாவடி ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் டிஎஸ்பி மகேஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், ஃபாஸ்ட்ராக் முறையில் தானியங்கி மூலம் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்களில் இருந்து பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.