வேடசந்தூர் அருகே முன்னால் சென்ற லாரியின் மீது பின்னால் கார் மோதி விபத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 35 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டி நான்குவழிச் சாலையில் மதுரையை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் முன்னால் சென்ற லாரியின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து காரில் வந்த இரண்டு பேர் காரில் கடத்தி வந்த குட்கா மூட்டைகளை காரில் இருந்து எடுத்து சாலையோர குழிக்குள் வீசிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசாரை கண்டதும். காரில் வந்த இரண்டு பேரும் தப்பியோடினர். இதையடுத்து விரைந்து சென்ற டிஎஸ்பி துர்கா தேவி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் குட்கா மூட்டைகளையும் காரையும் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து காரின் நம்பரை வைத்து உரிமையாளரையும் காரில் குட்காவை கடத்தி வந்து தப்பியோடிய இருவரையும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM