பெரும்போகத்தில் சோளப் பயிர்ச்செய்கைக்காக, 3 மாவட்டங்களுக்குத் தேவையான 175,000 மெற்றிக் டொன் யூரியா உரம் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி மொனராகலை, குருநாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான உர விநியோகம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சின் அறிவுறுத்தலின்படி, கொமர்ஷல் உர நிறுவனம் இந்த உர விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன், எஞ்சியுள்ள உரம் விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப விநியோகிக்கப்படவுள்ளது.