புதுச்சேரி, : புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போலி ஆவணங்கள் மூலம் பிற மாநில மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இதை தடுக்க, நடப்பாண்டில் புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம், பல் மருத்துவம் படிப்பிற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களை சென்டாக் நிர்வாகம் வருவாய்த் துறை உதவியோடு சரிபார்க்க வேண்டும். அதன்பின்னர், சென்டாக் நிர்வாகம் கலந்தாய்வினை நடத்திட வேண்டும்.அதே போல, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 64 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு சேர்க்கையை இறுதி செய்யும் முன், வருவாய்த் துறை மேற்படி மாணவர்களின் அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டும்.இந்த கல்வியாண்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒரே நேரத்தில் புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement