கல்வி சீர்திருத்தத்தின் கீழ் பாடப்புத்தகங்களின் நிறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் முதல் இதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
இங்கு அவர் தெடர்ந்தும் உரையாற்றுகையில்… ‘கல்வி சீர்திருத்தத்தின், முன்னோடி திட்டமாக மாதிரி பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு ஒரு தொகை நிதி; ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அது முழுமையாக செயல்படுத்தப்படும்.
அடுத்த முறை வேறு புத்தகம் வெளிவரும். கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், பாடப்புத்தகங்களின் நிறை நிச்சயமாக குறையும். இப்போது ஒன்பது கிலோவாக இருந்தால் அது மூன்று கிலோவாகக் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.