கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப் படுவது வழக்கம். குறிப்பாக, மாநிலம் முழுவதும் 40 ஆயிரத் துக்கும் மேற்பட்ட சமுதாய குழுக்கள் மூலம் பூஜைகள் நடைபெறுகின்றன. தசரா பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஒவ்வொரு சமுதாய குழு சார்பிலும் சிறப்பு பந்தல்கள் அமைக்கப்பட்டு துர்கா சிலைகள் நிறுவப்படும். முன்னதாக சிலைகளை ஓரிடத்தில் செய்து, பூஜை நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்வார்கள். பூஜை நடைபெறும் இடம் மின் விளக்கு கள் மற்றும் மலர்களால் அலங் காரம் செய்யப்படும். பூஜை நாட்களில் அன்னதானம் வழங்கப்படும்.
பூசாரிகள், பாதுகாவலர் கள், மின்சாதன பணியாளர்கள், கூலி தொழிலாளர்கள் உட்பட பலர் இதன்மூலம் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். இதுகுறித்து 400 சமுதாய பூஜை குழுக்களின் ஒருங்கிணைந்த அமைப்பின் (போரம் பார் துர்காட்சப்) தலைவர் பார்த்தோ கோஷ் கூறும்போது, “நமது கலாச்சாரத்தை பாதுகாக்க ஆண்டுதோறும் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் 3 முதல் 4 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடும். இதன் மூலம் 3 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். பூஜை நடைபெறும் இடம் மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய் யப்படும். துர்கா பூஜையை ஒட்டி சுமார் ரூ.40 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர் பார்க்கிறோம்” என்றார். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று கட்டுப் பாடு காரணமாக துர்கா பூஜை விமரிசையாக கொண்டாடப்பட வில்லை. ஆனால் இந்த ஆண்டு எவ்வித கட்டுப்பாடும் அமலில் இல்லாததால் இந்த விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தாலும், 40 ஆயிரம் பூஜை குழுக்களுக்கும் தலா ரூ.60 ஆயிரம் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.