வாஷிங்டன்: உக்ரைன் அதிபருடன் நேற்று தொலை பேசிவாயிலாக பிரதமர் மோடி பேசியதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தொலை பேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. சமீபத்தில் உக்ரைனின் சில பிராந்தியங்களை ரஷ்யா தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காண, இந்தியா பங்காற்ற தயாராக இருப்பதாக மோடி தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் வோலாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் தொலை பேசியில் உரையாடினார். அப்போது உக்ரைனுக்கு புதிதாக 625 மில்லியன் டாலர் அளவுக்கு ராணுவ உதவி செய்வது என ஜெலனஸ்கியிடம் உறுதியளித்தார். இதனை டுவிட்டரிலும் ஜோ பைடன் பதிவேற்றினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement