புதுடெல்லி: நாட்டில் சமத்துவமின்மை, வேலையில்லா திண்டாட்டம், பட்டினி, வறுமை போன்ற பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகிறது. இதை ஒன்றிய பாஜ அரசு முற்றிலும் மறுத்து வந்தது. ஆனால், பாஜ துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே ஒரு கருத்தரங்கில், ‘நாட்டில் நிலவும் வறுமை, வருமான சமத்துவமின்மை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம்’ குறித்து பேசியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகியோர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்ராவின் தாக்கத்தை பாருங்கள். நாட்டை உடைத்து சமூகத்தில் விஷத்தை பரப்புபவர்கள் கூட வறுமை, வேலையில்லா திண்டாட்டம், சமத்துவமின்மை போன்ற பிரச்னைகளை எழுப்புகிறார்கள். மோகன் பகவத் மஸ்ஜித் மற்றும் மதரஸாக்களுக்குச் செல்லத் தொடங்கினார். பிரதமர் நரேந்திர மோடியிடம் ஹோசபாலே ஏன் இந்த விவகாரங்களை எழுப்பவில்லை?’ என்றனர்.