2000, 500, 200… ரூ.8 கோடி மதிப்புள்ள நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலை!

ஆந்திராவில் புகழ் பெற்ற வாசவி கன்யாக பரமேஸ்வரி தேவி கோயில் 135 ஆண்டுகள் பழமையான கோவில். மிகவும் பிரசித்திபெற்ற இக்கோவிலில் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்படும் வரும் பாரம்பரிய நிகழ்வு எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஷேச நாட்களில் கோவிலை மலர்களால் அங்கலரித்து நாம் பார்த்திருப்போம் ஆனால் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்திருந்தால்? பார்ப்பவர்களில் கண்களைக் கவரும் வகையில் இக்கோவிலில் தங்கம் மற்றும் ரூபாய் நோட்டுகளால் கோவிலின் சுவர் முழுக்க அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஆந்திராவின் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள கோயிலில் அம்மனுக்கு நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாகக் கோயில் மூல விக்ரகமான அம்மன் சிலையைச் சுற்றி ரூ.2,000, ரூ.500, ரூ.100 எனத் தொடங்கிக் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளில் சுவர் எழுப்பி, மொத்தமாக ரூ.8 கோடி ரூபாய் நோட்டில் அலங்காரம் செய்து வழிபடு செய்துள்ளனர்.

Visakhapatnam, Andhra | A 135-yr-old temple of Goddess Vasavi Kanyaka Parameswari decorated with currency notes & gold ornaments worth Rs 8 cr for Navratri

“It’s public contribution & will be returned once the puja is over. It won’t go to temple trust,” says the Temple committee pic.twitter.com/1nWfXQwW7c
— ANI (@ANI) September 30, 2022

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், “இவையனைத்தும் பொதுப் பங்களிப்பு, பூஜை முடிந்ததும் திருப்பிக் கொடுக்கப்படும். இவை கோவில் அறக்கட்டளைக்குச் சொந்தமானது ’’ என தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.