PFI உடன் 873 கேரள காவல் துறை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா… உண்மை என்ன!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ( PFI) என்ற தீவிரவாத அமைப்பை மத்திய அரசு தடை செய்த சில நாட்களுக்குப் பிறகு, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கேரள காவல் துறையில் உள்ள குறைந்தது 873 அதிகாரிகளுக்கு PFI அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலானாய்வு அறிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது. PFI உடன் தொடர்புடைய கேரள காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை NIA செவ்வாய்க்கிழமை மாநில காவல்துறையிடம் சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

சப்-இன்ஸ்பெக்டர் (SI) மற்றும் ஸ்டேஷன் ஹெட் ஆபிசர் (SHO) நிலையில் உள்ள அதிகாரிகள் உட்பட பல கேரள காவல்துறை அதிகாரிகளை மத்திய ஏஜென்சி விசாரித்து வருகிறது என்றும் PFI அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ரெய்டு நடவடிக்கைகள் தொடர்பான முக்கியமான தகவல்களை கசியவிட்டதாக NIA அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியானது.

ரெய்டு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்குவதன் மூலம், PFI ஜிஹாதிகளுக்கு, காவல் துறை அதிகாரிகள் உதவியதாகவும் NIA கூறியது என்றும் கூறப்பட்டது. அவர்கள் NIA மற்றும் அமலாக்க துறை சோதனைகள் பற்றி PFI அமைப்பை சேர்ந்தவர்களுக்கு முன்கூட்டியே தகவல் அளித்தனர், இதன் மூலம் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், ஆவணங்கள் மற்றும் பிற பொருட்களை மறைக்க உதவியது. நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்ததாக அந்த அமைப்புக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு சோதனைகளை நடத்தியது.

எனினும், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு இருப்பதாக மாநில காவல்துறைத் தலைவரிடம் NIA தகவல் அளித்ததாக வெளியான ஊடகச் செய்திகள் ஆதாரமற்றவை என கேரள போலீஸார் மறுத்துள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமை நடத்திய முதல் கட்ட சோதனைகள் செப்டம்பர் 22 அன்று நிகழ்ந்தன. பின்னர் செப்டம்பர் 27 அன்று பல மாநிலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அதன் விளைவாக PFI அமைப்புடன் தொடர்புடைய குறைந்தது 250 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், செப்டம்பர் 28ஆம் தேதி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் நிறுவனங்கள் சட்டவிரோத அமைப்புகளாக செயல்படுகின்றன என்று மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.