அளவுக்கு அதிகமாக மது அருந்திய மருத்துவர் பலி!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராட்டினமங்கலம் ஈ.பி.நகர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் வி.நக்கீரன் (55) என்பவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், மோகனப்பிரியா என்ற மகளும் உள்ளனர். இடையே கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சுளாவும், மகளும் 15 வருடங்களுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டனர்.

இதனால் தனியாக வசித்து வந்த நக்கீரன் நாளுக்கு நாள் மதுவிற்கு அடிமையாகி அளவுக்கு அதிகமாக குடித்து வந்துள்ளார். மேலும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சேவூர் பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்த நக்கீரன் நேற்று பகலில் வீட்டுக்கு வரவில்லை.

இதனால் அவரது தந்தை வெங்கடேசன் சென்று பார்த்தபோது மருத்துவமனை வளாகத்திலேயே அளவுக்கு அதிகமாக மது அருந்தி நக்கீரன் இறந்தது தெரிய வருகிறது. இதுகுறித்து நக்கீரனின் தந்தை ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.