ஆசிய கிண்ண பெண்கள் ரி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று (04) ஐக்கிய அரபு அமீரக அணிக்கும், இந்திய பெண்கள் அணிக்கும் இடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கிண்ண பெண்கள் ரி20 கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகிறது.
இதற்கமைய நேற்று (04) நடந்த போட்டியில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொண்டது. இதில் நாணய சுழற்சியை வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் துடுப்பாட்டத்தை மேற்கொண்டு 20 ஓவர் நிறைவில் 178 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதில் இந்திய அணி சார்பில் தீப்தி ஷர்மா 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 64 ஓட்டங்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ், 45 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்களை பெற்றனர்.
இதையடுத்து, 179 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி களமிறங்கியது. 20 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 74 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதன்மூலம் 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப் போட்டியின் ஆட்ட நாயகியாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
ஆசிய கிண்ண பெண்கள் ரி20 கிரிக்கெட் தொடரில் இன்று (05) ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா அணிகள் மோதுகின்றன