ராமாயண கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் படத்தின் டீசர் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. பிரபாஸ், கிருத்தி சனோன் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோர் லீட் ரோலில் நடித்திருக்கும் இந்த படத்தின் டீசருக்கு சோஷியல் மீடியாகவில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. மீம்ஸ் மற்றும் டிரோல்கள் பறந்தன. சிலர் படத்தின் டீசரை வரவேற்றாலும், தரமற்ற சிஜி மற்றும் விஎப்எக்ஸ் எபெக்டுகளை ரசிகர்கள் விளாசி தள்ளினர். வீடியோ கேம்களைப் போல் படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகள் இருப்பதாக சாடினர்.
இது குறித்து பேசிய படத்தின் இயக்குநர் ஓம் ராவத், படத்தின் டீசருக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததை உணர முடிந்தாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் டீசருக்கு எழுந்திருக்கும் விமர்சனங்களால் விரக்தியடைந்துவிட்டதாக கூறியிருக்கும் அவர், விமர்சனங்கள் எதிர்பார்த்த ஒன்று தான் எனவும் கூறியுள்ளார். ” நான் நிச்சயமாக மனமுடைந்துவிட்டேன். விமர்சனங்கள் எழுவது ஆச்சரியப்படுவதற்கில்லை என்றாலும், டிரோல்கள் என்னை பாதித்தது. இருப்பினும், படம் பெரிய திரைக்ககாக எடுக்கப்பட்டது.
அனைத்து தரப்பு மக்களும் தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்க்க வேண்டும். இது ஒன்றும் மொபைல் போன்களுக்காக அல்லது யூ டியூப்களுக்காக எடுக்கப்பட்ட படம் அல்ல. ராமாயண கதையை வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், மூத்த குடிமக்களும் சென்று ஆதிபுரூஷ் படத்தை பார்க்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார் ஓம் ராவத்
ஆதி புரூஷ் திரைப்படம் 2023 ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதிபுருஷ் ஐமேக்ஸ் மற்றும் 3டியில் வெளியிடப்பட இருக்கிறது. டி-சீரிஸின் பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமார் ஆகியோரால் தயாரித்துள்ளனர். இந்தி மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக வெளியாகிறது.