புதுடில்லி ?:’காம்பியா நாட்டில், 66 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்து காரணமாக இருக்கலாம்’ என, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான காம்பியாவில், உடல்நலம் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகள் திடீரென உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், ‘அந்த குழந்தைகள் உட்கொண்ட மருந்து அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம்’ என தெரிவித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த, ‘மெய்டன் பார்மசிடிக்கல்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து ஏற்றுமதி செய்த இருமல் மற்றும் சளி, ‘டானிக்’ அந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.’இந்த மருந்தில், ‘டயத்லைன் கிளைகோசில்’ மற்றும் ‘எதிலின் கிளைகோசில்’ மூலப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு இருப்பது மரணத்துக்கு காரணமாக இருக்கலாம்’ என, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.’இது காம்பியாவை தவிர வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகி இருக்கலாம்’ என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement