டாக்டர் லயன் சி.ராஜகோபாலனால் துவங்கப்பட்டு, இன்று மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவாகி இருக்கும் ஜெயப்பிரியா நிறுவனங்கள், அனைத்தும் வெற்றி பாதையை நோக்கி பயணிக்கின்றன.
அவரது விடாமுயற்சி, உண்மை, உழைப்பு, உயர்வு போன்றவற்றைத் கற்றுக் கொடுத்து ‘அறச்சுடர்’ சி.ஆர்.ஜெயசங்கரை அனைத்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியில் அமர்த்தினார்.சேமிப்பு நிதி நிறுவனமான ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் (பி) லிமிடெட் மக்களின் உள்ளங்களில் 38 ஆண்டிற்கு மேலாக நன்மதிப்பை பெற்றுள்ளது.இந்நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளைகளை நிறுவி, ரூ.1,750 கோடி அளவுக்கு வணிகம் செய்கிறது. இன்று ரியல் எஸ்டேட், நலநிதி, உணவுப் பொருட்கள் விற்பனை, 7க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், உணவகங்கள், பணப்பரிமாற்றம், பெட்ரோல் விற்பனை மையம், ஏற்றுமதி – இறக்குமதி, சினிமா தியேட்டர்கள் என பல நிறுவனங்களை கொண்ட சாம்ராஜ்யமாக வளர்ந்து நிற்கிறது.
2014ம் ஆண்டில், விருத்தாசலம் பூந்தோட்டத்தில் ஜெயப்பிரியா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி துவங்கி, மூன்று சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் 4 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், ஒரு ‘நீட்’ பயிற்சி நிறுவனம் என, ஒரு கல்விக் குழுமமாக வளர்ந்துள்ளது. இதன் நிர்வாக இயக்குநர் ஜெயசங்கர், பள்ளி இயக்குநர் தினேஷ் வழிகாட்டுதலின் பேரில் மாணவர்களுக்கு சிலம்பம், கராத்தே, வில் அம்பு, நீச்சல், குதிரை ஏற்றம், யோகா, பரதம் என அனைத்து பயிற்சிகளும் அளித்து, மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு தயார் செய்கின்றனர்.
மேலும், ஐ.ஐ.டி., – என்.ஐ.டி., – ஐ.ஐ.எஸ்.சி., நிறுவனங்களில் சிறப்பிடம் பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு ஜே.இ.இ., மெயின், நீட் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.தற்போது ஜெயப்பிரியா குழுமம் ஜெயப்பிரியா ‘புட் ப்ராடக்ட்ஸ்’ பிரைவேட் லிட் என்ற நிறுவனம் மூலம் ஆதவா என்ற பெயரில் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து தமிழகம் முழுதும் விற்பனை செய்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement