கருட சேவை, தேர், தீர்த்தவாரி… சிறப்பாய் முடிந்த திருப்பதி பிரம்மோற்சவம்!

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்றது. இந்த வைபவத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவத்தின் 8 ஆவது நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி, காலையில் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பிரம்மாண்ட தேரிலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவ விழாவின் இறுதி நாளான இன்று திருமலையில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியையொட்டி, கோவியில் இருந்து மேளதாளம் முழங்க சக்கரத்தாழ்வார் புஷ்கரணிக்கு அழைத்து வரப்பட்டார். தீர்த்தவாரியின்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரணகணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது.

கடந்த ஒன்பது நாட்களாக திருமலை திருப்பதியில் கோலாகலமாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவத்தை.யொட்டி திருமலை திருப்பதியில் நேற்று மட்டும் 68,500 பேர் ஏழுமலையான தரிசித்துள்ளதாகவும், 3 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக வசூலாகி இருப்பதாகவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.