காஷ்மீரில் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து காஷ்மீர் கூடுதல் டிஜிபி கூறுகையில், “ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் மற்றும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி சோபியான் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது.
அந்தத் தகவலை அடுத்து சோபியான் மாவட்டத்தின் ட்ராச் பகுதியில் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் ஹனான் பின் யாக்கோப், ஜாம்ஷெட் என அடையாளம் காணப்பட்டுள்ளது.இவர்கள் இருவரும் புல்வாமா காவல் நிலையத்தின் சிறப்பு அதிகாரி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாவர். ட்ராச் பகுதியில் நடந்த என்கவுன்ட்டர் இன்னும் தொடர்ந்து வருகிறது” என்றார்.