கிரிஉல்ல கல்வி வலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகத்தின் பங்கேற்புடன் ஆரம்பமானது  

கிரிஉல்ல கல்வி வலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு இலங்கை பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக தலைமையில் அண்மையில் (24) கிரிஉல்ல விங்ரமசிங்ஹ தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாடசாலை மாண மாணவியர்களுக்கு ஜனநாயகம், பொறுப்புக் கூறல், வாக்களிப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் நடைமுறையான வாய்ப்புக்களை பாடசாலை சமூகத்துக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே மாணவர் பாராளுமன்றத்தின் நோக்கமாகும்.

ஜனநாயக வாழ்க்கை முறையின் அனுபவத்தை பாடசாலை மாணவ மாணவியருக்கு வழங்கும் நோக்கில் கிரிஉல்ல வலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான முதலாவது அமர்வு கிரிஉல்ல வலயக் கல்விப் பணிப்பாளர் ரஞ்சனி தொன்னக்கோன், பிரதிப் பணிப்பாளர் (அபிவிருத்தி) எல்.எஸ்.ஆர்.ஜயசிங்க, உதவிப் பணிப்பாளர் (சமூக விஞ்ஞானம்) ஏ.ஜே.எம். நயனா அபேரத்ன மற்றும் உதவி கல்விப் பணிப்பாளர் (முறைசாரா) கே.கே.எல்.என். சந்திரபால ஆகியோரின் பங்குபற்றுலுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குறித்த வலயத்தைச்சேர்ந்த மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சபாநாயகர் தெரிவுசெய்யப்பட்டார். அதன் பின்னர் பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் தெரிவுசெய்யப்பட்டதுடன், சபாநாயகர் முன்னிலையில் சகல மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிச் சத்தியம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கிரிஉல்ல கல்வி வலயத்திலுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட பாடசாலைகளின் மாணவர் பிரதிநிதிகள், பாட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.