சித்திரவதை முகாமாக மாற்றப்பட்ட கட்டிடம் ஒன்றில் பிளாஸ்டிக் பெட்டி ஒன்றில் குவியலாக தங்கத்திலான பற்கள்
சித்திரவதைக்கு உள்ளானவர்கள் பலரை உயிருடன் புதைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்ய வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட உக்ரைன் கிராமத்தில், பெட்டி ஒன்றில் தங்கத்திலான பற்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பகுதிகளை தற்போது உக்ரைன் படைகள் மீட்டு வருகின்றன.
அதனூடாக, ரஷ்ய வீரர்களின் கொடூரங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகியும் வருகிறது.
Image: Kharkiv Police
சமீபத்தில் அவ்வாறு விடுவிக்கப்பட்ட Pisky-Radkivski என்ற கிராமத்தில் உக்ரைன் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையில் அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
ரஷ்யர்களால் சித்திரவதை முகாமாக மாற்றப்பட்ட கட்டிடம் ஒன்றில் இருந்து பிளாஸ்டிக் பெட்டி ஒன்றில் குவியலாக தங்கத்திலான பற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பற்கள் அப்பகுதி உக்ரைன் மக்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் போது பறித்ததாகவே நம்பப்படுகிறது.
மேலும் பத்துக்கும் மேற்பட்ட பற்களை பறிக்கும் கருவியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, சித்திரவதைக்கு உள்ளானவர்கள் பலரை உயிருடன் புதைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Image: Kharkiv Police
ரஷ்யர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படும் கிராமங்களில் மொத்தமாக போர் குற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை, அங்கிருந்து கைப்பற்றப்படும் தரவுகள் வெளிச்சமிட்டு காட்டுவதாக உக்ரைன் அதிகாரிகள் தரப்பு கூறுகின்றனர்.
மனிதாபிமானமற்ற நிலையிலேயே ரஷ்யர்கள் உக்ரைன் மக்களை நடத்தியதாகவும், கொடூரமான துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியுள்ளதாகவும் தரவுகள் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, பெரும்பாலான குடியிருப்புகளை ரஷ்யர்கள் கொள்ளையிட்டும் சென்றுள்ளனர். குடியிருப்புகளை மொத்தமாக சேதப்படுத்தியும் உள்ளனர்.
Image: Kharkiv Police