அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) புதிய தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹாசிம் ஏகமனதாக இன்று (05) தெரிவுசெய்யப்பட்டார்.
அவரின் பெயரை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.பி திஸாநாயக முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நிரோஷன் பெரேரா அதனை வழிமொழிந்தார்.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஒத்துழைப்பைப் பெற்று குழுவின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக கௌரவ கபீர் ஹாசிம் இங்கு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ மொஹான் பிரியதர்ஷன. த சில்வா, கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ விமலவீர திசாநாயக, கௌரவ டயானா கமகே, கௌரவ காதர் மஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எஸ்.பி திசாநாயக, கௌரவ (கலாநிதி) சரத் வீரசேகர, கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, கௌரவ அஷோக அபேசிங்ஹ, கௌரவ புத்திக பத்திரன, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ ஹேஷா விதானகே, கௌரவ இசுறு தொடங்கொட, கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ வசந்த யாப்பா பண்டார, கௌரவ சாணக்கியன் ராசமாணிக்கம், கௌரவ சஹான் பிரதீன், கௌரவ டி.வீரசிங்க, கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் மற்றும் கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.