சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இளம் பெண் ஒருவர் ராமநாதபுரம் பாரதி நகரில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு மருத்துவர் ஜபருல்லா கான் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மருத்துவர் ஜபருல்லா கானை கைது செய்துள்ளனர்.