சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை – என்ன நடந்தது?!

உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் 17 வயது காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 21 வயது இளைஞன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, காவல்துறை அவரை தேடிவந்தது. அவர் அலிகர் நகரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

தற்கொலை

இது தொடர்பாக காவல்துறை, “பாலியல் வன்கொடுமை குற்றவாளி அலிகாரில் மறைந்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சகோதரருடன் சென்றிருக்கிறார். பின்னர் அவர் ராஜ்புரா பகுதியில் உள்ள கிராமத்தில் தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றார். அங்கு தங்கியிருந்த அவர் திடீரென வாந்தி எடுக்கத் தொடங்கியிருக்கிறார். உடனே, அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இறந்தார். உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் விஷம் அருந்தியிருப்பதாக தெரியவந்திருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவரின் சகோதரர் கூறுகையில், “எனது சகோதரர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பாக பயந்துக்கொண்டிருந்தார். அதனால், நாங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து வைக்க சிறுமியின் குடும்பத்தினரை சமாதானப்படுத்த முயற்சி செய்தோம், ஆனால் அவர்கள் மறுத்து, காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள்.

காவல்துறை

போலீஸ் நடவடிக்கை மற்றும் சிறை தண்டனைக்கு பயந்து விஷத்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்’ எனத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது. காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.