தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்த இந்திய இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் பழக்கம் வேகமாக பரவி வருகிறது. போதை பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தினமும் கஞ்சா குட்கா மற்றும் பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை காவல்துறைய கைப்பற்றி விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் விற்பனை செய்த இந்து முன்னணி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவரிடம் இருந்து 8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.