தமிழகத்தில் 380 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு

தஞ்சாவூர்: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 380
பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 17 பேர்.மீதமுள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3 – 4 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது. பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் காய்ச்சல் இருப்பதால், தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, கடந்த 11 நாட்களாக நாள்தோறும் 1,000 முதல் 1,500 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.