வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஹிந்து கோவில் இன்று (அக்.,5) திறக்கப்பட்டது.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், ஜெபெல் அலி என்ற இடத்தில் பிரமாண்டமான ஹிந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு சிவன், விஷ்ணு உட்பட, 16 கடவுள்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவில், 80 ஆயிரம் சதுர அடி பரப்பில், பிரமாண்ட அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு, 2020 பிப்ரவரியில் பூமி பூஜை நடத்தப்பட்டது.
இந்நிலையில், தசரா பண்டிகையை முன்னிட்டு இந்த கோவில் இன்று முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர் ஷேக் நயன் பின் முபாரக் அலி, அந்த நாட்டுக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் ஆகியோர் துவக்க விழாவில் பங்கேற்றனர். கோவில் கடவுள்களை தரிசிக்க ஆன்லைன் மூலமும், கியூஆர் கோடை ஸ்கேன் செய்தும் புக்கிங் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement