பெரியகுளம்: தொடர் விடுமுறை காரணமாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கடந்த 20 நாட்களுக்கு முன்பு வரை பெய்த தொடர் மழை காரணமாக அருவியில் தண்ணீர் சீராக கொட்டி வருகிறது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் கும்பக்கரை அருவியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். அருவியில் நீர்வரத்து சீராக உள்ள நிலையில், ஆர்ப்பரித்து கொட்டும் நீரில் சுற்றுலா பயணிகள் குடும்பங்களுடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.