தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையை காண இன்று காலை முதலே குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மகிழ்ந்தனர்.
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை ஆயுதபூஜை விடுமுறை என தொடர் விடுமுறை என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற யுனெஸ்கோ அங்கிகாரம் பெற்ற பழமையான பத்மநாபபுரம் அரண்மனையை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்ற மன்னர் கேரளா கட்டிடக்கலைகளுக்கு எடுத்துக்காட்டாக இந்த அரண்மனையை வடிவமைத்தார். தற்போது இந்த அரண்மனை முழுக்க முழுக்க கேரளா தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த அரண்மனையை காண இன்று தமிழகம் ம.டுமில்லாமல் கேராளாவில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கட் எடுத்து அரண்மனையின் கட்டிடகலை நுட்பங்களை கண்டு ரசித்து மன்னர் காலத்தில் அவர்கள் பயன்படுத்தி வந்த வாள், கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் பார்வையிட்டு செல்கின்றனர்.
அதேபோல் அரண்மனையின் உள்ளே அமைந்துள்ள மந்திரசாலை, தாய்க் கொட்டாரம், நாடக சாலை, நான்கடுக்கு மாளிகை, தெற்கு கொட்டாரம், மணி மாளிகை, அன்னதான மண்டபம், போன்ற பழங்காலத்து கட்டிடங்களையும் பார்த்து ரசித்து குடும்பத்தினருடன் செல்போனில் புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM