58 வயதுடைய பெண் ஒருவரை போலியான குற்றச்சாட்டு வழக்கு ஒன்றின் அடிப்படையில் கைது செய்தமைக்காக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட நிதியில் இருந்து மொத்தமாக 5 இலட்சம் ரூபாவை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத் தீர்ப்பினை நீதியரசர் விஜித் மலல்கொடவுடன் இணைந்து நீதியரசர் எஸ்.துரைராஜா மற்றும் நீதியரசர் மஹிந்த சமயவர்தன வழங்கி உள்ளனர்.
குறித்த மனுதாரர் கைது செய்யப்படும் போது ‘தேடப்படும் சந்தேகநபராக’ இருந்த போதிலும், கைது செய்யப்பட்ட நபர் குறித்த அதிகாரியிடம் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை சட்டத்தின்படி விளக்குமாறு கோரியுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டதன் காரணத்தை கூறவில்லை என விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது, அதனால் வழக்கின் செலவுத்தொகையாக 50 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஏ.மஹிந்த, பொலிஸ் கான்ஸ்டபிள் சண்டருவன் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் பண்டார கருணாதிலக்க ஆகியோர் அரசியலமைப்பின் 12 (1) சரத்தின் கீழ் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் மற்றும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதிவாதிகள் அரசியலமைப்பின் பிரிவு 13 (1) அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர்.
மனுதாரர் தனது மனுவில், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை வைத்திருந்ததற்கும், விற்பனை செய்ததற்கும் கடந்த காலப் பதிவேடு இருப்பதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் 710 மில்லிகிராம் பிரவுன் பவுடர் அடங்கிய 6 போதைப்பொருள் பொதிகளை வைத்திருந்ததாக மனுதாரர் மீது எதிர்மனுதாரர்கள் வழக்கு பதிவு செய்தமை தெரியவந்தது.
அரசாங்க பகுப்பாய்வாளரினால் குறித்த பொதிகளில் ஆபத்தான மருந்துகள் உள்ளடக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மனுதாரர் மீது எதிர்மனுதாரர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து , ஆறு மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மனுதாரர் இறுதியாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மனுதாரர் சார்பில் தினேஸ் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் சட்டத்தரணி சஞ்சீவ ரணவீர, மாலக பள்ளியகுருகே ஆகியோர் ஆஜராகியிருந்தனர். பிரதிவாதிகள் சார்பில் தர்ஷிகா பெரேராவுடன் சட்டத்தரணி விஷ்வ எம்.குணரத்ன ஆஜராகியிருந்தார். சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி சதுரங்கி மஹவடுகே ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.