பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இன்னும் கொடி பறக்க விட்டுக் கொண்டிருப்பவர் அமிதாப் பச்சன். 60 ஆண்டுகளை கடந்து இன்றும் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் மட்டுமல்லாது தொழிலபதிபராகவும் இருக்கிறார் அமிதாப். ஹோட்டல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். சினிமா உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்திருக்கிறார். இந்தியாவின் டாப் பணக்காரர்கள் லிஸ்டிலும் இவரது பெயர் இருக்கிறது. இன்றைய மதிப்பில் அமிதாப் பச்சனின் சொத்துமதிப்பு ஏறத்தாழ 3000 கோடி ரூபாயை தாண்டுமாம்.
கேட்டாலே வாயை பிளக்க வைக்கும் அளவுக்கு அவருக்கு சொத்து இருந்தாலும், அமிதாப் பச்சனின் மூத்த மகள் போதிய பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக பேட்டியளித்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. அமிதாப் பச்சனுக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகள் ஸ்வேதா பச்சன், மகன் பிரபல நடிகர் அபிஷேக் பச்சன். இவர் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மகள் ஸ்வேதா பச்சன் பிரபல தொழிலதிபர் நந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
வசதி வாழ்வோடு இருக்கிறார் என்ற தோற்றம் இருந்தாலும், மகள் ஸ்வேதா பச்சனிடம் செலவுகளுக்கு பணமே இல்லையாம். பாட்காஸ்ட் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது இந்த தகவலை தெரிவித்திருக்கிறார். தங்களின் செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற நிலை என் குழந்தைகளுக்கு வரக்கூடாது என அவர் தெரிவித்திருக்கிறார். “அப்பா கோடீஸ்வரராக இருக்கலாம். ஆனால், நான் இன்னும் நிதிச் சிக்கலில் தான் இருக்கிறேன். பணப் பிரச்சனையில் இருந்து எப்போது விடுபடப்போகிறேன் எனத் தெரியவில்லை” என்றும் ஸ்வேதா பச்சன் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி வைரலாகியிருக்கிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகளுக்கே இந்த நிலைமையா? என்றும் விம்மிக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.